வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.
இன்று முதல் கோடை விடுமுறை
unknown nodeஅந்த வகையில், வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் முதல் வாரத்திலிருந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.