மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூர வீடியோ வெளியானதை அடுத்து முதல்வர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் கலவரத்தில் நேற்று நெஞ்சை உலுக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவில் மணிப்பூர் மாநில பகுதியில் 2 பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி அழைத்து செல்வது போல் கொடூர சம்பவம் வைரலானதை அடுத்து, இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2 பெண்களுக்கு எதிராக நடந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயல் நெஞ்சை கிழிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி, இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
unknown nodeதற்போது இந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது, நமது சமூகத்தில் இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும், கடுமையான தண்டனை கிடைப்பதையும், மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
