குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார்.
இந்திய ராணுவத்தின் சுகோய் 30 MKI போர் விமானத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக பயணம் செய்தார். அசாம் மாநிலம் தெஸ்பூர் விமானப்படை மையத்தில் இருந்து சுகோய் விமானத்தில் சிறிது நேரம் பயணம் செய்த பின்னர் தரையிறங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
3 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் அசாம் மாநிலத்துக்கு வந்த, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, விமான நிலையத்தில் அந்த மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் வரவேற்றனர். இந்த சமயத்தில் விமானப்படை விமானிகள் அணியும் சீருடையை அணிந்து இந்திய ராணுவத்தின் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.