மீண்டும் ஜன. 4-ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை – நரேந்திர சிங் தோமர்

Union Minister Narendra Singh Tomar told reporters that talks with the farmers would resume on January 4.Farmerbill

ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

இதையடுத்து, இன்று விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. போராட்டத்தில் உள்ள விவசாயிகள் உடன் மத்திய அரசு நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி மீண்டும் நடக்கும் என தெரிவித்துள்ளார்.