தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி.!

Telangana Chief Minister Chandrasekhar Rao has been admitted to a hospital in Hyderabad due to ill health. Yashoda Hospital.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று பிற்பகல் தனக்கு நுரையீரலில் எரியும் உணர்வு இருப்பது காரணமாக செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

சந்திரசேகர் ராவின் தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் எம்.வி.ராவ், நுரையீரல் நிபுணர் டாக்டர் நவ்னீத் சாகர் மற்றும் இருதயநோய் நிபுணர் டாக்டர் பிரமோத் குமார் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர் யஷோதா மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்ததாக முதலமைச்சர் அலுவலகம் (சி.எம்.ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.