பாலியல் தொல்லை தந்த இளைஞனை தன் கணவரின் ஷூவால் அடித்து துவம்சம் செய்த பெண்! வைரல் வீடியோ!

Default Image

தெலுங்கானாவில் பாலியல் தொல்லை தந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்த பெண் .

தெலுங்கானா மாநிலத்தில்  நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் நீண்டகாலமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். எல்லை மீறியதை உணர்ந்த  அந்த பெண்  ஒருகட்டத்தில் பொருட்படுத்தாமல் தன் கணவிரிடம் தெரிவித்துள்ளார்.

தன் கணவரின் யோசனைப்படி அந்த இளைஞரை வீட்டுக்கு வரவைத்துள்ளார் அந்த பெண். அப்பொழுது அந்த பெண்ணின் கணவர் ஒளிந்திருப்பதை அறியாத அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட பெண்ணின்  கணவர் அந்த இளைஞரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளார்.

தான் அணிந்திருந்த ஷூ வை கலட்டி தன் மனைவியிடம் கொடுத்து அடிக்க சொல்ல அந்த பெண்ணும், அந்த இளைஞரை ஆத்திரம் தீரும் வரை சரமாரியாக வெளுத்து விட்டார். அந்த பெண் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்