கோவில் கிணறு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதிஉதவியை மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியை முன்னிட்டு படேல் நகரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூஜைகள் செய்ய படிக்கட்டுக் கிணற்றின் அருகே பலர் கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென கோயிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்துள்ளனர்.
unknown nodeஇந்த விபத்தில் 19 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச முதல்வர் எஸ்.எஸ்.சௌஹான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேழும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முழு மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
unknown nodeபிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசி, நிலைமையை தெரிந்து கொண்டேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node