லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!

Published by
பாலா கலியமூர்த்தி

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இருநாட்டு ராணுவ கமாண்டர் 6ம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சுஷில்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்றுள்ள நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியை மீட்பது, அனைத்து துருப்புகளை பின்வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து சீன துருப்புகள் அதிகறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை உயரங்களில் இந்தியா தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று சம்பவங்கள் உட்பட, போர் தயார் நிலையை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதன் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிதாக இணைக்கப்பட்ட ரபேல் போர் விமானங்களை பயன்படுத்த ஐ.ஏ.எஃப் தயாராக உள்ளது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

40 minutes ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

56 minutes ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

2 hours ago

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…

3 hours ago

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…

3 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் ஓபன் டாக்.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…

3 hours ago