சிம்லா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..! 250 பேர் வெளியேற்றம்..!

சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

IGMC-Shimla

சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐஜிஎம்சியில் உள்ள ஓபிடி கட்டிடத்தில் உள்ள உணவு விடுதியில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளது. இதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீவிபத்து குறித்து தகவலறிந்து ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும், கட்டிடத்தில் இருந்து சுமார் 250 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

unknown node