ஹைதராபாத் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..! 4 பேர் உயிருடன் மீட்பு..!

ஹைதராபாத்தில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டனர்.

ஹைதராபாத் : செகந்திராபாத்தின் ராம்கோபால்பேட்டை பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஐந்து மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் மாடியில் இருந்த துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அருகில் உள்ள மக்கள் சிரமத்திற்குப்பட்டனர். இதுவரை கடைக்குள் சிக்கியிருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

மேலும் கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மூன்று மணிநேரத்திற்கு மேலாக மீட்பு மற்றும் தீயணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

unknown node