75 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இம்ரான் கானின் கருத்துக்களுக்கு இந்தியா உடனடியாக பதிலளித்துள்ளது.
ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டம் நடைபெற்று வருகிறது.அதாவது கொரோனா காரணமாக தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை.
அந்த வகையில் ,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை அடங்கிய வீடியோ ஐ.நா பொதுச்சபையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.அவரது உரையில் ,அப்போது, ” இந்தியாவில் நடைபெறும் பிரச்சனைகளை மறைக்கும் நோக்கத்தில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்தை திருப்பியுள்ளது. “பாகிஸ்தான் எப்போதும் அமைதியான முறையை கடைபிடித்து வருகிறது. இந்த நோக்கத்திற்காக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் ” என்று தெரிவித்தார்.
இந்த உரையின் போது இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிட்டோ சபையில் இருந்து வெளியேறினார்.பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிட்டோ இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைத்து பேசினார்.அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதியாகும். ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் இந்தியாவின் உள் விவகாரங்கள்” என்று கூறினார்.”காஷ்மீரில் எஞ்சியுள்ள ஒரே பிரச்சினை காஷ்மீரின் ஒரு பகுதியுடன் தொடர்புடையது. அதை இன்னும் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகிறது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அந்த பகுதிகள் அனைத்தையும் விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமர் (இம்ரான் கான்) இன்று பயன்படுத்திய வார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாரத்தை இழிவுபடுத்துகின்றன ”என்றும் மிஜிடோ வினிட்டோ கூறினார். இம்ரான் கான் “ஜூலை மாதம் தனது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ஒரு” தியாகி “என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.
“39 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவிற்கு இனப்படுகொலை கொண்டுவந்த நாடு பாகிஸ்தான் என்றும் குற்றம்சாட்டினார். தனது சொந்த மக்களைக் கொன்றது பாகிஸ்தான் தான். பல வருடங்களுக்குப் பிறகும் அந்தநாடு செய்த கொடூரங்களுக்கு நேர்மையான மன்னிப்பு கேட்காத அளவுக்கு வெட்கமில்லாத நாடு இதுவாகும் பயங்கரவாத மற்றும் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் நாடு.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இம்ரான் கான் அமெரிக்காவில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இந்த நாட்டிற்கு இருக்கும் ஒரே மகுடம் ,கடந்த 70 ஆண்டுகளாக உலகுக்கு காண்பிப்பது பயங்கரவாதம், இன அழிப்பு, பெரும்பான்மை அடிப்படைவாதம் மற்றும் இரகசிய அணுசக்தி வர்த்தகம் என்று கூறினார்.”பாகிஸ்தான் ஒரு சாதாரண நாடாக மாறுவதற்கான ஒரே வழி, பயங்கரவாதத்திற்கு அதன் தார்மீக, நிதி மற்றும் பொருள் ஆதரவைத் தவிர்ப்பது ஆகும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…