ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள யெடிபோராவில் ஒரு சில பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி படைகளுக்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக ஜம்மு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node