ரயில் சேவையை தொடர்ந்து விமான சேவை மே 3ஆம் தேதி வரை ரத்து

இந்தியாவில் விமான சேவை மே 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே பிரதமர் நரேந்திர மோடி ,இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதன்விளைவாக இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்தது.இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை மே 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025