டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து...! 26 பேர் உயிரிழப்பு..!

26 killed in bus tire burst accident in Maharashtra

accident

மகாராஷ்டிராவில் பேருந்து டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த பேருந்து புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், பேருந்தில் உள்ள டீசல் டேங்க் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது இந்த தீ பேருந்து முழுவதும் பரவிய நிலையில் மூன்று குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணத்தை 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.