பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து..! ஒருவர் பலி, 20 பேர் காயம்..!

புனேயில் பள்ளத்தில் தனியார் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

புனேயில் பள்ளத்தில் தனியார் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

புனேவிலிருந்து சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலை அருகே தனியார் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவில் உள்ள துல்ஜாபூரில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புனே நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் லேசான காயங்களுடன் இருந்த 9 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.