பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதால், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனினும், இந்த அறிவிப்பானை வெளியாவதற்கு முன்பு ஏற்றுமதிக்காக, கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பு, அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிபந்தனைகளுடன் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நாட்டில் அரிசி விலை 20% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதோடு, “உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க” இந்த தடை உதவும் என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது, இது உலகளாவிய அரிசி வர்த்தகத்தில் 40% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது, அத்துடன் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இந்த தடையால் வங்காளதேசம் மற்றும் நேபாளம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இரு நாடுகளும் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
