Breaking:10% இடஒதுக்கீடு – மத்திய அரசு மேல்முறையீடு ...!

The Central govt has appealed to the Supreme Court over the issue of providing 10% reservation for those who are behind in medical studies.

மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது கடந்த ஆக.25 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல்  மத்திய அரசுமேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.