சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டி.! இன்று பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.!

இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேச மாநிலமும் ஒன்று. இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மத்தியில் மத்தியப் பிரதேசத்தில்

PMModi

இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேச மாநிலமும் ஒன்று. இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மத்தியில் மத்தியப் பிரதேசத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து மக்களிடம் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக யாத்திரைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, யாத்திரைகளின் உச்சதைக் குறிக்கும் வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக தொண்டர்களின் ‘காரியகர்த்தா மகாகும்பம்’ என்ற மாபெரும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். போபாலில் உள்ள ஜம்போரி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் நரேந்திர தோமர் ஆகியோர் மாநில கட்சித் தலைவர்களுடன் இடத்தை ஆய்வு செய்தனர்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் 10 லட்சம்  தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, செப்டம்பர் 15ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் ரூ. 50,700 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் உட்பட மாநிலம் முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் அடங்கும்.