மாந்திரீகம் செய்வதற்காக மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50000-க்கு விற்ற கொடூர கணவன்.
மகாராஷ்டிராவின் பீடில் உள்ள சவுந்தனா கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் மாமியாரால் கொடூரமான கொடுமைகள் நடந்துள்ளது.
பாலியல் பலாத்காரம்
அப்பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, சில சூனிய சடங்குகளுக்காக அவரது மாதவிடாய் இரத்தத்தை ரூ. 50,000 க்கு விற்றுள்ளனர். மேலும் அப்பெண்ணை பட்டினி போட்டே கொன்றுள்ளனர். இந்த சம்பவம், சர்வதேச மகளிர் தினத்தன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிவசேனா (யுபிடி) எம்எல்சி மனிஷா கயண்டே, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரினார்.
இதுகுறித்து, மனிஷா கயண்டேகூறுகையில், பெண்ணின் தாய்வழி குடும்பத்தினரின் தலையீட்டைத் தொடர்ந்து, புனேவில் உள்ள விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் தனது மாதாந்திர மாதவிடாய் நாட்களில், மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததாகவும், சமீபகாலமாக அவளது மாமியார் மாதவிடாயின் போது தன்னை கட்டி வைத்துவிட்டு, பருத்தி துணியால் மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து சூனியம் செய்யும் சிலருக்கு ரூ.50,000க்கு விற்றதாக அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு
புனே போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.