போலியோவிற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுத்த கொடூரம்..!

A shocking incident has taken place in Maharashtra. There 12 children have been given sanitizer instead of polio drops

மகாராஷ்டிராவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, 12 குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தைகள் சுமார் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், சுகாதார பணியாளர் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுப்பதற்காக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் கொடுக்கக்கூடிய போலியோ சொட்டு மருந்து வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாடு முழுவதும் போலியோ சொட்டு முகாம் நடைபெற்றது.