கொரோனா தடுப்பூசி – இன்று நாடு முழுவதும் ஒத்திகை

The dry run will be conducted by all the State and union territories governments from today - Health Secretary

கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று  மேற்கொள்ளப்படுகிறது.இந்த ஒத்திகை அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், குறைந்தது மூன்று இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சில மாநிலங்களையும், போக்குவரத்து சிக்கல் உள்ள மாவட்டங்களையும் இந்த ஒத்திகைக்குப் பயன்படுத்த உள்ளது. ஒவ்வொரு பரிசோதனை இடத்திலும், பொறுப்பு மருத்துவ அதிகாரி, 25 பரிசோதனைப் பயனாளிகளை (சுகாதாரப் பணியாளர்களை) அடையாளம் காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.