காட்டு யானையுடன் செல்பீ எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை...!

A civil servant from Chhattisgarh has died after stepping on an elephant while trying to take a selfie with it.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் யானையுடன் செல்பீ எடுக்க முயற்சித்த பொழுது, யானை மிதித்ததால் உயிரிழந்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசாமந்த் எனும் பகுதியை சேர்ந்த அரசு சுகாதார ஊழியர் அஜய் திவாரி என்பவர் நேற்று முன்தினம் பணி முடிந்து காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு யானை கூட்டம் சாலையை கடந்து செல்வதை கண்டு ஆர்வத்துடன் அந்த யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்பீ எடுக்க முயற்சி செய்துள்ளார்.

இவரைப் பார்த்ததும் யானைகள் பயந்து விலகி செல்ல முயற்சித்ததும் அஜய், இன்னும் ஆர்வத்துடன் யானைகள் முன் நின்று செல்பீ எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது ஒரு யானை திடீரென அஜய் திவாரியை தனது தும்பிக்கையால் தூக்கி போட்டு காலால் மிதித்து உள்ளது. அதில், அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.