கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி டெல்லியில் ஒரு மருத்துவ மாணவியை ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களின் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் அவர்களில் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மற்ற 4 பேரும் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் 4 பேருக்கு தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது. இதனால் தூக்குப் போடுவதற்கான வாரண்ட்டும் கொடுக்கப்பட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் வருகின்ற 16 ம் தேதி தூக்கு தண்டனை வழங்க வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக வருகிறது.இந்த நிலையில் நான்கு பேரில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீது விசாரணை வருகின்ற 17-ம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இதனால் தூக்கு தண்டனை தள்ளிப்போனது.
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…