கரண்ட் இல்லை ஆனா கரண்ட் பில் கொடுத்த சத்தீஸ்கர் அரசு ..!

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா பகுதி உள்ளது.இப்பகுதியில் மின்சார வசதியே இல்லை அதனால் மக்கள் இருளில் வசித்து

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா பகுதி உள்ளது.இப்பகுதியில் மின்சார வசதியே இல்லை அதனால் மக்கள் இருளில் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு உள்ள குழந்தைகள் விளக்குகளை வைத்து படித்து வருகின்றன.

unknown node

இது குறித்து அப்பகுதி மக்கள்” எங்கள் பகுதியில் மின்சார வசதியே இல்லை.நாங்கள் அனைவரும் இருளில் வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் விளக்குகளை கொண்டு படித்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் எங்களுக்கு மின்சாரம் இல்லாத எங்கள் பகுதிக்கு எப்படி அரசு மின்சார கட்டண ரசீது அனுப்பி உள்ளது என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.

unknown node

இந்த சம்பவம் தொடர்பாக  பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா கூறுகையில் , இந்த செய்தியை நான் பத்திரிகையில் தான் பார்த்தேன்.இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு விட்டு உள்ளேன்.விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கரண்ட் இல்லை ஆனா கரண்ட் பில் கொடுத்த சத்தீஸ்கர் அரசு ..!