ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தற்பொழுது தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தினை சேர்ந்த தோலி தேவி எனும் 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனக்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இளைஞர்கள் பலர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் தோலி தேவியை பாராட்டியுள்ளதுடன், அவர் தனது வீட்டில் தனக்கான இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
unknown node