மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்ற குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைப்பு.!

மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்ற ஒருவரின் வீட்டிற்கு தீ வைப்பு.

Manipur housefire

மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்ற ஒருவரின் வீட்டிற்கு தீ வைப்பு.

மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தில் நடைபெற்ற கொடூர சம்பவமாக இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச்செல்லப்படும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி வைரலானதையடுத்து பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் வெளியான வீடியோவில் பெண்களை அழைத்துச்செல்லும் இரண்டு பேர்களில் ஒருவர் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

unknown node

நேற்று மணிப்பூர் காவல்துறையும் கைதான அந்த முக்கிய நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்பதும் போலீசார் நேற்று வெளியிட்டனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தியின் வீட்டை மக்கள் எல்லாரும் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளனர்.

unknown node

பெரும்பாலும் இதில் அதிக பெண்கள் எல்லாரும் சேர்ந்து அந்த குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.