வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஒரு பண்ணையில் உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ஒன்று வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பசுவுக்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பசு 51 சென்டிமீட்டர் உயரமும், 26 கிலோ எடையும் கொண்டது. இந்த பசுவை மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கின்னஸ் புத்தகத்தில், கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு 61 சென்டி மீட்டர் உயரத்துடன், உலகிலேயே உயரம் குறைவான பசு என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.