புதிதாக உருவெடுக்கும் H3N2 வைரஸ்..! நிபுணர்கள் எச்சரிக்கை..!

H3N2 வைரஸ் குறிப்பிடத்தக்க மருத்துவ பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

H3N2 வைரஸ் குறிப்பிடத்தக்க மருத்துவ பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் இந்த வைரஸ்களின் வடிவம் எதிர்பாராத விதமாக மாறியிருப்பதை மருத்துவப் பயிற்சியாளர்கள் கவனித்துள்ளனர். இதனால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

H3N2 தொற்று :இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா H3N2 (Influenza H3N2) வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றமடைந்து பரவுகிறது. H3N2 வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸின் துணை வகை வைரஸ் ஆகும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக பன்றிகள் பறவைகள் மற்றும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது.

unknown node

அறிகுறிகள் மாற்றும் அறிவுறுத்தல்:காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை H3N2 வைரஸின் அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும், குறிப்பாக வயதானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது.

unknown node

[Representative Image]

நிபுணர்கள் எச்சரிக்கை :இது குறித்து டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் டிரேன் குப்தா கூறுகையில், “கடந்த 6 மாதங்களில் வைரஸ்களின் வடிவம் குறிப்பிடத்தக்க அளவில் மற்றும் எதிர்பாராத விதமாக மாறியுள்ளது. பொதுவாக, காய்ச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கும் நோயாளி H3N2 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

unknown node

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குறிப்பிடத்தக்க மருத்துவப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கடுமையான நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்துவதாக அவர் மேலும் கூறினார். இந்தியாவில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றால் ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முதல் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.