இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு!

In India, 37,566 people have been infected with corona in the last 24 hours. The death toll has risen to 907, bringing the total number of casualties so far to 3,03,16,897.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பேர் கொரோனா தொற்றால் 37,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 907 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8 ஆயிரம் குறைந்துள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,03,16,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 907 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,97,637 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 56,994 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,52,659 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை32,90,29,510பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.