ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் ஆட்சியராக பிளஸ் 2 மாணவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், 63 மண்டலங்களில் மாணவிகளே வட்டாட்சியராக பணியாற்றினர்
நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ஆந்திராவில் முதன்முறையாக அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் காந்தம் சந்திரா செயல்படுத்திய புதுமையான திட்டம் மாணவிகள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒருநாள் அதிகாரிகளாக தங்கள் கடமைகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்த மாணவிகளில் ஒருவரான, கார்லடின் மண்டலம், கஸ்தூர்பா அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஷ்ராவனி ஒருநாள் ஆட்சியராக நேற்று பதவியேற்றார். மாணவி ஷ்ராவனியை, ஆட்சியர் காந்தம் சந்திரா, இணை ஆட்சியர் நிஷாந்த்குமார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அழைத்துச்சென்று ஆட்சியர் நாற்காலியில் அமர வைத்தனர். தொடர்ந்து, டிஷா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கும் ஒரு கோப்பில் ஒரு நாள் கலெக்டர் ஷ்ராவனி கையெழுத்திட்டார். ஒரு நாள் இணை ஆட்சியராக மதுஸ்ரீ என்ற மாணவி பொறுப்பேற்றார். அதேபோல், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள 63 மண்டலங்களில் பள்ளி மாணவிகள் ஒரு நாள் வட்டாட்சியர்களாக பணியாற்றினர். மேலும், பல மாணவிகள் இணை ஆட்சியர், ஆர்டிஓ, வட்டாட்சியர் மற்றும் தகவல் துறை, வட்ட வழங்கல் மற்றும் பிற துறை அலுவலர்களின் பொறுப்புகளை ஏற்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…