#Corona:டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டது

The rising corona in Delhi has touched new highs

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு புதியதாக  கொரோனா  தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2020 டிசம்பருக்குப் பிறகு டெல்லியின் தினசரி பதிவாகும் தொற்று உறுதிசெய்யப்பட்ட  எண்ணிக்கை 1900 ஐத் தாண்டுவது இதுவே முதல் முறை.கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் வைரஸால் இறந்துள்ளனர்,இது டெல்லியில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை 11,012 ஆகக் உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,59,619 ஆகும்.