மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்த கொள்ளையர்கள்...!

A police officer who went to stop the sand robbery was killed by the sand robbers with a tractor.

death

மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவல்துறை அதிகாரி மீது மணல் கொள்ளையர்கள் ட்ராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கலபுரகி அருகே தலைமை காவலர் மயூர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணபுரா பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போது இயன் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாராயணபுரா பீமா நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மர்ம கும்பலை ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தலைமை காவலர் மயூர்  மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளை கும்பல், டிராக்டர் ஏற்றி காவலரைகொன்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.