முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, காவலில் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றசாட்டு.
மணீஷ் சிசோடியா கைது:
unknown nodeபுதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்று கிழமை சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு பிறகு, சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதன்பின் மணீஷ் சிசோடியா தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவரை சிபிஐ 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ காவல்:
unknown nodeஇந்த உத்தரவை அடுத்து, 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்ட நிலையில், 2 நாள் காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனரீதியாக துன்புறுத்தல்:
unknown nodeஇந்த நிலையில், டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, காவலில் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக நீதிபதியிடம் பேசிய சிசோடியா, ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் கிட்டத்தட்ட 9 முதல் 10 மணி நேரம் என்னை அமர வைத்து ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் மீது குற்றசாட்டியுள்ளார்.