அதானி குழுமம் மீதான சரமாரியான குற்றச்சாட்டுகள்.! விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.!

அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது . அதன் படி நாளை விசாரணை நடைபெறும் என

அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது . அதன் படி நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் அதானி குழுமம் தொடர்பான ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் முறைகேடாக பங்குச்சந்தையில் செயல்பட்டு வருவதாகவும் , அதன் மூலம் நிதி திரட்டுவதாகவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது. இதற்கு அதானி தரப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும், ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை அதானி குழும பங்குகளையும் தாண்டி , இந்திய பங்குசந்தையிலேயே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

unknown node

நாடாளுமன்ற அமளி :இந்நிலையில், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் :இதற்கிடையில், ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை குறித்தும், அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி குழுமத்தால் இந்திய பங்குசந்தையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

unknown node

விசாரணைக்கு ஒப்புதல் :இந்த கோரிக்கையை ஏற்று, தற்போது அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலை அடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. ஹிண்டன்பர்க் தனியார் நிறுவனம், அதானி குழுமம் தனியார் நிறுவனம் என்றாலும் அதற்குள் நடக்கும் கருத்து மோதலில் அரசு தலையிட முடியாது என்றாலும், அதானி பங்குகளால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிப்புள்ளாகும் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிகிறது. நாளை தான் இந்த வழக்கு விசாரணை எந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெறும் என உறுதியாக தெரியும்.