காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த பெண்..! காத்திருந்த அதிர்ச்சி..!

பிகாரில் காதலனை சந்திக்க பெண் ஒருவர் கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl cuts power supply

பிகாரில் காதலனை சந்திக்க பெண் ஒருவர் கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனை இருட்டில் ரகசியமாகச் சந்திப்பதற்காக தனது கிராமம் முழுவதும் மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை வாழக்கமாக வைத்திருந்ததால் கிராம மக்கள் பெரும் அவாதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, தங்கள் கிராமத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பிறகு, இதனைக் கண்டறிய கிராம மக்கள் மின்வெட்டு ஏற்படும்போது வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது காதலர்களை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதன்பின், இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.