ஒரு ஜோடி ஒன்றாக திருமணம் செய்துகொள்வதை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரே மாப்பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு மணப்பெண்களுடன் திருமணம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் ஒரே இளைஞரை விரும்பியதால் அந்த இளைஞர் இருவரையும் மணந்தார். மணமகனின் பெயர் சாந்து , இரண்டு பெண்களும் பரஸ்பர ஒப்புதலால் சந்து இருவரையும் திருமணம் செய்துகொண்டார்.
சாந்து ஒரு விவசாயி. ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்தார், பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன்பின், ஒரு மாதத்திற்குப் பிறகு ஹசீனா என்ற மற்றொரு பெண்ணை சாந்து காதலித்தார். அவரையும் சாந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், இதைத்தொடர்ந்து, மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். எனவே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்னர், மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மணமகனும், மணமகளும் ஒன்றாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று கிராமத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
unknown nodeஇதில் சிறப்பு என்னவென்றால், திருமணத்தின் இந்த முடிவை இரு பெண்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டன. இவர்கள் கடந்த 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் சந்துவின் குடும்பத்தினரும், இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஒரு நெட்டிசன் இந்த திருமண வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.