உத்திரபிரதேசத்தில் இளைஞர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பல இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது கார்களில் அட்டகாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இளைஞர்கள், தங்களுடைய கார்களின் மேல் ஏறி நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.
unknown nodeஇது குறித்து தகவல் அறிந்த மொராதாபாத் காவல் துறை உயர் அதிகாரி ( Senior Superintendent Of Police) , இளைஞர்கள் யாரென கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்கள் யாரேனும் இதுபோன்ற ஸ்டண்ட் செய்தால் அவர்களுடைய வாகன உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
unknown nodeசாலையில் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை ஓட்டி ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் மீது போக்குவரத்து விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.