3 மாதங்களுக்கு பின் இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு...!

After 3 months, the theaters in Pondicherry are opening with 50% of the audience from today.

3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த ஒன்றாம் தேதி புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வில், திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் திரைப்படங்களை திரையிட தயாராக உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், வெளிநாட்டு திரைப்படங்கள், ஆங்கில திரைப்படங்கள் மற்றும் பழைய தமிழ் திரைப்படங்களே புதுச்சேரி திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் கூறப்படுகிறது.