'இது கடவுள் கொடுத்த பரிசு' – ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை...!

In the Hospet area of Karnataka, a newborn baby boy had 9 toes on one foot.

கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாலச்சந்திரன் அவர்கள் கூறுகையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

பல குழந்தைகள் கூடுதலாக கை மற்றும் கால் விரல்களுடன் பிறப்பது வழக்கம் தான். ஆனால் ஒரே காலில் ஒன்பது விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளது மிகவும் அரிதான ஒரு சம்பவம்தான். குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்கப் பழகி விடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில் இந்த குழந்தை, எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.