4 மாதங்களில் இது 8-வது முறை..! பிரதமர் மோடியின் கர்நாடகப் பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகா பயணம் செய்யவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகா பயணம் செய்யவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 2023ம் ஆண்டின் நான்கு மாதங்களில் மோடியின் 8-வது கர்நாடக பயணம் இதுவாகும்.

கர்நாடகாவின் பந்திபூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெறவிருக்கும் ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக ஜனவரி 2015 முதல், பிரதமர் மோடி மொத்தம் 32 முறை மாநிலத்திற்கு வந்துள்ளார்.

இந்த வருகைகளில் ஏறக்குறைய 25 சதவீதம் தேர்தலின் போது நடந்தவை. மேலும் வரும் மே மாதம் 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.