வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்த முன்னுரிமை – பிரதமர் மோடி பேச்சு

To strengthen relations with Bangladesh has been a priority for me since the first day: Prime minister Narendra Modi

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு  நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,வங்கதேசம் எங்கள் கொள்கையின் குறிப்பிடத்தகுந்த  தூணாகும்.முதல் நாளிலிருந்தே வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும்,கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.