அயோத்தி பயணம் :
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
unknown node08.04.2023 5:30 PM
வந்தே பாரத் ரயில் தொடக்கம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன் கிழமை தவிர மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு கிளம்பும் ரயில் திருப்பூர், ஈரோடு சேலம் நின்றுவிட்டு 11.50க்கு சென்னை வந்துவிடும். சென்னையில் இருந்து மதியம் 2.25க்கு கிளம்பி இரவு 8.15க்கு கோவை சென்றடையும்.
08.04.2023 4:30 PM
அண்ணாமலை எங்கே.?
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் நிலையில் அவரை வரவேற்க அண்ணாமலை வரவில்லை. அவர் எங்கே என்று விசாரித்தபோது, கர்நாடக தேர்தல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் வேட்பாளர் தேர்வு காரணமாக டெல்லியில் இருப்பதாக பாஜகவினர் சொல்கின்றனர். அமித் ஷா, ஜே.பி நட்டா ஆகியோரை சந்திக்க வேண்டியிருப்பதால் சென்னை வரவில்லை என்றும் நாளை நேரடியாக நீலகிரி செல்வார் என்றும் கூறப்படுகிறது.
08.04.2023 4:00 PM
சென்னை வந்தடைந்தார் மோடி :
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார். பின், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையை மாலையில் தொடங்கி வைக்கிறார்.
08.04.2023 3:20 PM
தெலங்கானா அரசு ஒத்துழைப்பு தரவில்லை :
தெலங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனையளிக்கிறது என குற்றம் சாட்டினார். தெலங்கானா மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். குடும்ப அரசியலும், ஊழலும் வேறு வேறு இல்லை; குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில் ஊழல் பெருகும் என விமர்சித்தார்.
08.04.2023 2:15 PM
GoBack_பொணந்தின்னி :
பிரதமர் மோடி வருகைக்கு ஆதரவாக #Vanakkam_Modi எதிராக #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆன நிலையில், தற்போது #GoBack_பொணந்தின்னி என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது.காலையில் இருந்து சைலண்டாக இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது இணையதளத்தை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
08.04.2023 1:30 PM
பிரதமருக்கு எதிராக போராட்டம் :
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் காங்.. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புச் சட்டை அணிந்து, வள்ளூர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் #GobackModi என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
08.04.2023 12:30 PM
நிலக்கரி சுரங்கம் :
டெல்டாவில் 3 இடங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விடும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷியின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு அவருக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
unknown nodeமுக்கிய கூட்டம் :
டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 224 இடங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, நாளை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என கர்நாடக முதல்வர் பொம்மை கூறினார்.
unknown node08.04.2023 11:13 AM
மாஸ்க் கட்டாயம் இல்லை :
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை; தேவைப்பட்டால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தோர் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். கடந்த 3 நாட்களுக்கு முன் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
08.04.2023 10:40 AM
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் :
நீலகிரியில் மஞ்சூர் சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஏப்.27ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வின்போது, ஒரு சில மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில், வழித்தட அலுவலர் சீனிவாசன், அறை கண்காணிப்பாளர்கள் ராம்கி, மூர்த்தி ஆகிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
08.04.2023 10:10 AM