போதைப்பொருள் மீட்பு :
ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரு வழக்கமான பகுதியில் டாகர் பிரிவு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உரி செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமான மூட்டை ஒன்றை டாகர் பிரிவு படையினர் கண்டுபிடித்தனர். கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு, சுருண்டா பொதுப் பகுதியில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
unknown node2023-03-16 5:15 PM
வானிலை மாற்றம் :
தெலுங்கானாவின் சில பகுதிகளில் திடீரென வானிலை மாற்றமடைந்துள்ளது. அதில் ஹைதராபாத் நகரத்திலிருந்து வானிலை மாறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
unknown node2023-03-16 4:20 PM
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் :
மக்களவையில் உறுப்பினர் ரவிக்குமார் கேள்விக்கு, தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் உள்ளனர். எந்த ஒரு ஊழியரையும் பணி நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை, சுங்கச்சாவடிகளை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள், பாஸ்டாக் முறை அறிமுகம் செய்யப்பட்டப் பிறகு ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
2023-03-16 3:40 PM
ஹெலிகாப்டர் விபத்து :
அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் பறந்த போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore : #BREAKING : அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..!
2023-03-16 2:10 PM
பேனர்கள் வைக்கத் தடை :
unknown nodeதிமுக நிகழ்ச்சிகளில் கட்அவுட், பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.
Readmore : #BREAKING : திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை – ஆர்.எஸ்.பாரதி
2023-03-16 1:45 PM
ராகுல்காந்தி விளக்கம் :
unknown nodeஇந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார்.
Readmore : இந்தியாவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை.! – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம்.!
2023-03-16 1:30 PM
ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு :
பொதுத்தேர்வு முடிந்த பிறகு மாலை 3 மணிக்கு தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்து தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் சென்று விசாரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Readmore : இனி தேர்வு முடிந்ததும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு.! அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை.!
2023-03-16 1:00 PM
அதானி விவகாரம் :
டெல்லியில் அதானி விவகாரத்தில் காங்கிரஸின் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களில் ஒருவர், மாப்பிள்ளை போல் உடையணிந்து, தடுப்புகளை கடக்க முயன்றார்.
unknown node2023-03-16 12:39 PM
விஜய் சங்கல்ப் பேரணி :
மத்தியப் பிரதேச முதல்வரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் விஜயநகரில் விஜய் சங்கல்ப் பேரணியை நடத்தினார்.
unknown node2023-03-16 12:15 PM
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்:
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு சூழல் ஏற்படவில்லை. இருப்பினும், காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
unknown node2023-03-16 11:20 AM
பிரதமர் ஆலோசனை:
பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களான ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், கிரண் ரிஜியு, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தினார்.
2023-03-16 10:40 AM
தீ விபத்து :
மும்பையின் முலுண்டில் உள்ள ஏழு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட பத்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 80 பேர் மீட்கப்பட்டனர். முலுண்ட் வெஸ்டில் உள்ள ஜாக்ருதி சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.