Today's Live : ரயில்வே நில வேலை மோசடி..! 24 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை..!

ரயில்வே நில வேலை மோசடி :

ரயில்வே நில வேலை மோசடி :

ரயில்வே நிலத்தில் வேலை மோசடிக்காக 24 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், 1900 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,55,734), 540 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 1.5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டன.

unknown node
2023-03-11 06:30 PM

ஹோலி பண்டிகை குற்ற விவரம்:

சில சமூக ஊடகங்கள் ஹோலி பண்டிகை தொடர்பான டெல்லியின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்ற விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம். சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

2023-03-11 05:40 PM

பேருந்து மோதி விபத்து :

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கிழவல்லூர் அருகே கார் மீது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்து தேவாலயத்தின் சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

unknown node
2023-03-11 04:20 PM

டெல்லி மதுபானக் கொள்கை :

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

unknown node
2023-03-11 03:25 PM

திருச்செந்தூர் கோவிலில் நாட்டு வெடிகுண்டு:

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாட்டு வெடிகுண்டு போல ஒரு மார்ம பொருள் இருந்துள்ளதை அடுத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Readmore : திருச்செந்தூர் கோவிலில் நாட்டு வெடிகுண்டு.? வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு.!

unknown node
2023-03-11 02:30 PM

பிரதமர் மோடி சந்திப்பு :

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

unknown node
2023-03-11 02:10 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்றுமுதலே உழைக்க வேண்டும். என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

unknown node
2023-03-11 01:10 PM

லக்னோ விமானம் :

பெங்களூரில் இருந்து லக்னோ நோக்கிச் செல்லும் ஏஐஎக்ஸ் கனெக்ட் விமானம், இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறப்பட்ட 10 நிமிடங்களில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டடுள்ளது.

2023-03-11 12:23 PM

டெக் மஹிந்திரா சிஇஓ நியமனம் :

இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெக் மஹிந்திரா வாரியம் மோஹித் ஜோஷியை டெக் மஹிந்திராவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனமாக அறிவித்தது.

unknown node
2023-03-11 11:37 AM

டெல்லி மதுபானக் கொள்கை :

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

unknown node
2023-03-11 11:17 AM

பாலியல் வன்கொடுமை :

கேரளாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2023-03-11 10:20 AM