Today's Live : தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்..! ஏப்ரல் 30ம் தேதி தொடக்கம்..!

தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் :

தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் :

தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நடக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ல் பதிவாகும் வாக்குகள் மே 1-ஆம் தேதி எண்ணப்படும் எனவும் தயாரிப்பாளர் கவுன்சில் தகவல் கூறியுள்ளது.

3.04.2023 5:50 PM

மாஸ்க் கட்டாயம் :

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் முதன்முதலாக கொரோனாவால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, காரைக்காலில் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம அணிய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

unknown node

3.04.2023 4:45 PM

கேரள ரயிலுக்கு தீ வைத்த விவகாரம் :

கேரள ரயிலுக்கு தீ வைத்த சம்பவத்தை விசாரிக்க அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. மேலும், ஓடும் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அடையாளம் தெரியாத நபர் நொய்டாவைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3.04.2023 3:45 PM

கலால் கொள்கை வழக்கு :

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சிபிஐ வழக்கில், டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

3.04.2023 2:30 PM

யானைகள் உயிரிழப்பு :

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் 2 யானைகள் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளது. அதில் போடூர் அருகே ஒரு ஆண் யானையும், கோடுபட்டி அருகே ஒரு பெண் யானையும் உயிரிழந்துள்ளது. தற்பொழுது, இந்த யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதா.? அல்லது சேற்றில் சிக்கி இறந்துள்ளதுள்ளதா.? என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3.04.2023 1:35 PM

கலாஷேத்ரா கல்லூரி ஏப்ரல் 5ஆம் தேதி திறப்பு:

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் வரும் 5ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே திறக்கப்படுகிறது.

3.04.2023 1:25 PM

ஓபிஎஸ் மேல்முறையீடு:

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

3.04.2023 12:25 PM

சத்ராவில் என்கவுன்டர் :

சத்ராவில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், இருவர் தலா 5 லட்சம் ரூபாய் பரிசும் வைத்திருந்தனர். 2 ஏகே 47 கைப்பற்றப்பட்டது என்று ஜார்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

3.04.2023 11:30 AM

பாஜக எம்எல்ஏ கடிதம் :

மேற்கு வங்காளத்தில் ராம நவமி தொடர்பான சம்பவங்களைத் தொடர்ந்து, மத்தியப் படைகளை தலையீடு செய்யுமாறு கோரி ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு பர்சுராவின் பாஜக எம்எல்ஏ ஹூக்ளி பிமன் கோஷ் இரண்டு தனித்தனி கடிதங்களை எழுதினார்.

unknown node

அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் :

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

unknown node