பாரிசு கன்னட திம் திமாவா :
டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்திற்கு ‘பாரிசு கன்னட திம் திமாவா’ கலாச்சார விழாவைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். இந்நிகழ்வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
unknown node2023-02-25 05:20 PM
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் அதிமுக வேட்பாளர் பற்றி நான் பேச விரும்பவில்லை. இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இந்த தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறினார்.
2023-02-25 04:20 PM
ஜெர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை :
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் (Olaf Scholz) உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
unknown node2023-02-25 01:25 PM
“குரூப் 2” தேர்வு:
குரூப் 2 முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் தாமதமாக தொடங்கியுள்ளது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியத்தால் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்த பின்னர், வேறு ஒருநாளில் இந்த தேர்வை நடத்தவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2023-02-25 12:38 PM
ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கம்:
டெல்லியில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வழியின் உரிமையை உறுதி செய்வதற்காக, ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிடபுள்யுடி (PWD) ஆல் ஐடிஓ (ITO)-வில் ஒரு மசூதியும், ஒரு கோயிலும் இடிக்கப்பட்டன.
unknown node2023-02-25 11:59 AM
முதல்வர் வாக்கு சேகரிப்பு:
ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் (EVKS) இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.