வைக்கம் போராட்டம் :
கேரளாவில் நடைபெற்று வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அந்த விழாவில் மலையாளத்தில் பேசி தனது உரையை தொடங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1.04.2023 5:30 PM
கலாஷேத்ரா விவகாரம் :
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக சென்னை கலாஷேத்ரா இயக்குநர், துணை இயக்குநர் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக தலைவர் குமரி உத்தரவிட்டுள்ளார்.
1.04.2023 4:30 PM
போபால் – புதுடெல்லி வந்தே பாரத் :
ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் போபால் – புதுடெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
unknown nodeமருந்து இருப்பு வைத்திருப்பது குற்றமல்ல :
தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஆதிலட்சுமி, தன்மீதான சட்ட நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் மருத்துவர்கள், குறைந்த அளவிலான மருந்துகளை இருப்பு வைத்திருப்பதால் மட்டுமே, சட்டவிரோதமாக மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார் எனக்கூறி அவரை தண்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான மருந்துகளே மனுதாரரின் இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
1.04.2023 1:30 PM
2024ல் பயன்பாட்டிற்கு வரும் பாலம்:
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக சட்டப்பேரவையில், விவேகானந்தர் மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலத்திற்கு, ரூ.37 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் 2024 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1.04.2023 12:15 PM
எம்பி ஜெகநாத் கடிதம் :
மேற்கு வங்க பாஜக மக்களவை எம்பி ஜெகநாத் சர்க்கார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் ஹவுராவில் அடக்குமுறை பரவுவதைத் தடுக்க மத்தியப் படைகள் தலையிட வேண்டும். கலவரத்திற்கான மூல காரணத்தை என்ஐஏ விசாரிக்கக் வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.
unknown node1.04.2023 11.10 AM
கர்நாடகா செல்லும் பிரதமர் :
2023ம் ஆண்டின் 4 மாதங்களில் 8வது முறையாக, வரும் ஏப்ரல் 9ம் தேதி கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு பந்திபூர் புலிகள் சரணாலயத்தின் ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் பொன்விழாவில் பங்கேற்கிறார். வரும் மே மாதம் 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1.04.2023 10.20 AM