கேரளாவில் பிரதமர்:
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “கேரளா விழிப்புணர்வு மற்றும் படித்த மக்களின் மாநிலம். கடின உழைப்பும் பணிவும் மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்” என்றார். கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் மற்றும் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவையும் கொச்சியில் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
25.04.2023 4:55PM
ஆபரேஷன் காவேரி:
சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டா நகருக்கு புறப்பட்டனர். அதன்படி, சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் 278 இந்தியர்கள் புறப்பட்டனர்.
25.04.2023 4:30 PM
க்ரே டிக் :
துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி-யின் ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம் ட்விட்டரில் க்ரே டிக் (Grey Tick) பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவரானார். ட்விட்டர் சந்தா செலுத்தாததால், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் ப்ளூ டிக் அதிரடியாக நீக்கப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக்கை கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
25.04.2023 3:45 PM
நிவாரணம் :
சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
unknown nodeMK Stalin Report [Image Source : Twitter]
25.04.2023 12:55 PM
வந்தே பாரத் ரயில் :
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை செல்கிறது. கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், ஷோரனூர். கோழிக்கோடு, கன்னூர் ஆகிய ரயில் நிலையங்களில் வந்தே பாரத் நின்று செல்லும். திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே பயணிக்க இந்த ரயில் 8 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
25.04.2023 11:55 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை:
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுநர், நடத்துனர்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.
25.04.2023 11:15 AM
கிராமசபை கூட்டம்:
மே 1ம் தேதி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், “கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னரே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். எந்த ஒரு மதச்சார்புள்ள வளாகத்திலும் இந்த கூட்டம் நடைபெறக்கூடாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
unknown nodeReport [Image Source : Twitter]
25.04.2023 11:00 AM
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
unknown node25.04.2023 10:45 AM