கட்சியில் இருந்து சஸ்பெண்ட் :
ஆந்திர பிரதேசத்தில் ஆனம் ராம்நாராயண ரெட்டி, கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, மேகபதி சந்திரசேகர் ரெட்டி, உண்டவல்லி ஸ்ரீதேவி ஆகியோர் யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி) பிறப்பித்த உத்தரவை மீறி, எம்எல்சி தேர்தலில் குறுக்கு வாக்களித்ததற்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
24.03.2023 5.30 PM
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை:
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
24.03.2023 4.00 PM
ராகுல் காந்தி நீக்கம் :
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து தற்பொழுது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
unknown node24.03.2023 2.20 PM
முதலீட்டு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த எல்ஐசி திட்டம் :
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அதானி குழும நிறுவனங்களில் அதன் முதலீடு மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து ஆபத்தை குறைக்கும் முயற்சியில், அதன் கடன் மற்றும் பங்குகளை நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தும் வரம்புகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.
24.03.2023 1.30 PM
மக்களவை ஒத்திவைப்பு :
அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றினார். இந்நிலையில், மக்களவையின் அடுத்த அமர்வு, மார்ச் 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Readmore – மக்களவையில் ‘பட்ஜெட் மசோதா’ நிறைவேற்றம்.! அடுத்த அமர்வு மார்ச் 27க்கு ஒத்திவைப்பு…
டெல்லியில் எதிர்க்கட்சியினர் தொடங்கிய பிரமாண்ட பேரணி :
ராகுல் காந்தியின் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற பதாகைகளை சுமந்து சென்றனர். அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட கூடாது என முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பேரணியானது நாடாளுமன்ற வளாகத்தில் சிறுது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
24.03.2023 12.45 PM
வருகைப்பதிவு கட்டாயம்:
50,000 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாத விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரப்பட்டியல் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படும். நீண்ட நாட்கள் வராத மாணவர்களின் சமுதாய, பொருளாதாரம் கண்டறியப்பட்டு முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 75% வருகைப்பதிவு கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
24.03.2023 11.40 AM
தீர்ப்பை கண்டித்து போராட்டம் :
ராகுல் காந்திக்கு எதிரான சூரத் கோர்ட் தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
unknown nodeமக்களவை மீண்டும் ஒத்திவைப்பு:
ஆளும் கட்சியினர், ராகுல் காந்தி இங்கிலாந்தில், இந்தியா பற்றி உரையாற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்கட்சியினர், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவையை 12 மணிவரை ஒத்தவைப்பதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
24.03.2023 11.13 AM
தமிழ்நாட்டின் முதல் மிதவை உணவகம் :
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். இதில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமாக 2 அடுக்கில் படகு உணவகம் அமைக்கப்பட உள்ளது. படகின் தரைத்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி, சமயலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24.03.2023 10.05 AM