Today'sLive : வடகொரியா ராணுவ அணிவகுப்பில் 'ஜாம்பி யூனிட்'..! வைரலாகும் புகைப்படம்..!

வடகொரியா ராணுவ அணிவகுப்பில் 'ஜாம்பி யூனிட்' :

வடகொரியா ராணுவ அணிவகுப்பில் ‘ஜாம்பி யூனிட்’ :

பத்திரிகையாளர் ஜீன் எச் லீ வட கொரியாவில் ராணுவ அணிவகுப்பில் “ஜாம்பி யூனிட்” படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த அணிவகுப்பு கொரிய மக்கள் புரட்சி இராணுவம் நிறுவப்பட்ட ஆண்டின் நிறைவை குறிக்கிறது. “இந்த அணிவகுப்புகளுக்காக நான் எல்லா வருடங்களிலும் கிம் இல் சுங் சதுக்கத்தில் இருந்தேன், இந்த ஜாம்பி யூனிட்களை நான் பார்த்ததே இல்லை. இப்போது அது என்னை பயமுறுத்துகிறது.” என்று லீ தனது பதிவில் எழுதியுள்ளார்.

unknown node

2023-02-11 06:09 PM

டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி வன்முறை வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகல் :

2019 ஜாமியா மில்லியா இஸ்லாமியா வன்முறை வழக்கு தொடர்பாக ஷர்ஜீல் இமாம் மற்றும் பிறரை சமீபத்தில் விடுதலை செய்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி, இதேபோன்ற வன்முறை வழக்குகளை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

unknown node
2023-02-11 05:55 PM
பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை :

உலக பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலரது இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

Readmore :அல்-கொய்தா.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப.? மும்பை, பெங்களூருவில் தீவிர சோதனை.!

2023-02-11 05:13 PM
மறைந்த பாஜக தலைவர் சாகர் சாஹுவிற்கு ஜேபி நட்டா அஞ்சலி :

சத்தீஸ்கரில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண்பூர் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சாகர் சாஹுவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தனது வீட்டில் அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார்.

Readmore :பாஜக தலைவர் சாகர் சாஹு மரணம்..! ஜேபி நட்டா அஞ்சலி..!

2023-02-11 05:10 PM
இந்து சமய அறநிலையத்துறை வழக்கு :

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-02-11 04:38 PM
ஆளுநர் மாளிகை வளாக பள்ளிவாசல் அனுமதி மறுப்பு :

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Readmore :ஆளுநர் மாளிகை வளாக பள்ளிவாசல் மட்டும் ஏன் திறக்கப்படவில்லை? – ஜவாஹிருல்லா

2023-02-11 04:03 PM
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Readmore  :உபரி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

2023-02-11 03:40 PM
ஆஞ்சநேயர் கோவில் வழிபாடு :

கர்நாடகா மாநிலம் புத்தூரில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபாடு.

unknown node

[Image Source : Twitter/@ANI]

2023-02-11 03:37 PM
சமையல் பணியாளர்களை பணிநீக்கம் உத்தரவு ரத்து :

திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர் பணிநீக்கம் ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Readmore :#BREAKING: சமையல் பணியாளர்களை பணிநீக்கம் உத்தரவு ரத்து – ஐகோர்ட் கிளை

2023-02-11 03:22 PM
ஒன்றிய அரசு, அதானி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நாராயணசாமி :

அதானி பிரதமர் மோடியின் நிழலிலேயே தனது தொழிலை பெருக்கி, அனைத்து அரசு விதிமுறைகளையும் மீறி, இன்று ஒரு பணக்காரராக உள்ளார் என நாராயணசாமி விமர்சனம்.

Readmore :எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு, அதானி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நாராயணசாமி

2023-02-11 03:08 PM
ரிசர்வ் வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உள்ளிட்ட முக்கிய ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  செபி நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பங்குசந்தை விவகாரம் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore  :ஆர்பிஐ அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை.!

2023-02-11 02:30 PM
பரந்தூரில் விமான நிலைய போராட்டம் :

சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என சீமான் ட்வீட்.

unknown node

Readmore :முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும்! – சீமான்

2023-02-11 02:23 PM

நாளை மறுநாள் ஜிகே வாசன் பிரச்சாரம் :

அதிமுகவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் ஈரோட்டில் நாளை மறுநாள் பிரச்சாரம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Readmore :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – நாளை மறுநாள் ஜிகே வாசன் பிரச்சாரம்..!

2023-02-11 01:56 PM

பொள்ளாட்சி விவகாரம் – பழனிசாமியை விசாரிக்க மனு:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

unknown node

Readmore :பொள்ளாச்சி பாலியல் வழக்கு.! எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புதிய மனு.!

2023-02-11 01:47 PM

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் :

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

Readmore :மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

2023-02-11 01:35 PM

இல்லம் தேடி கல்வி திட்டம் :

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த இதுவரையிலான செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

unknown node

Readmore :இல்லம் தேடி கல்வி திட்டம்.! மதிப்பீட்டு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு.!

2023-02-11 01:09 PM

டாக்டர் அம்பேத்கர், இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சை மேடை நாடகம் :

கர்நாடகா, பெங்களூருவில் ஒரு கல்லூரியில் ஒரு மேடை நாடகத்தில் பட்டியலின சமூகம் , இடஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றி தவறாக சித்தரித்ததாக கூறி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

unknown node

Readmore :டாக்டர் அம்பேத்கர், இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சை மேடை நாடகம்.! 6 கல்லூரி மாண்வர்கள் சஸ்பெண்ட்.!

2023-02-11 01:05 PM

சிங்கார சென்னை 2.0 திட்டம்:

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

unknown node

Readmore :சிங்கார சென்னை 2.0 திட்டம் – ரூ.98 கோடி ஒதுக்கீடு!

2023-02-11 12:21 PM

டெல்லி எல்ஜி உத்தரவு :

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா மற்றும் ஆம் ஆத்மி எம்பி என்.டி.குப்தாவின் மகன் நவீன் என்.டி.குப்தா ஆகியோரை தனியார் டிஸ்காம் வாரியத்தில் இருந்து அரசு நியமனம் செய்யப்பட்ட பதவியில் இருந்து நீக்கியுள்ளார். “சட்டவிரோதமாக” பதவிகளை ஆக்கிரமித்ததற்காக அவர்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக மூத்த அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எல்ஜி அலுவலகம் தெரிவித்துள்ளது.

unknown node

[Image Source : Twitter/@ANI]

2023-02-11 12:14 PM

பிசியோதெரபிஸ்ட்கள் மக்களின் நம்பிக்கை :

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட் தேசிய மாநாட்டில் பிரதமர் தனது மெய்நிகர் உரையில், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக உதவி பெற டெலி-மருந்து வசதியை பரவலாகக் கிடைக்கச் செய்வதை வலியுறுத்தினார். மேலும் பிசியோதெரபிஸ்ட்கள் மக்களின் நம்பிக்கை, பின்னடைவு, மீட்பு ஆகியவற்றின் அடையாளமாக வெளிவருகிறார்கள் என்று கூறினார்.

unknown node

2023-02-11 11:27 AM

டெல்லி கலால் வழக்கு :

டெல்லி கலால் ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் (Yuvajana Sramika Rythu) காங்கிரஸ் எம்.பி மகுண்டா ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. இந்த விவகாரத்தில் கடந்த 3 நாட்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட மூன்றாவது கைது இதுவாகும்.

unknown node

[File Image]

2023-02-11 11:08 AM

சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் சுட்டுக் கொலை :

சத்தீஸ்கரின் நாராயண்பூரில் உள்ள பாஜக தலைவர் சாகர் சாஹு அவரது வீட்டில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவலின்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சாஹுவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்.

2023-02-11 10:33 AM

காங்கிரஸை சாடிய நிர்மலா சீதாராமன் :

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதையடுத்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் டெட்டால் மூலம் முகத்தை கழுவ வேண்டும் என்று கூறினார்.

2023-02-11 10:25 AM

கொரோனா பரவல் எண்ணிக்கை :

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

2023-02-11 10:20 AM

ஜம்மு காஷ்மீர் :

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் பதிண்டி மாலிக் மார்க்கெட் பகுதியில் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

unknown node

[Image Source : Twitter/@ANI]

2023-02-11 10:06 AM